ஞாயிற்றுக்கிழமையன்று சூரியனையும், பைரவரையும் வணங்குவது சிறந்தது. ஒரு மனிதருக்கு சூரியன் ஆத்மகாரகன்.
ஜாதகத்தில் சூரியன் சரியில்லையென்றால் அவர் பலவிதமான சிக்கல்களை சந்திப்பார். தந்தையால் மகிழ்ச்சி கிட்டாது. எவ்வளவு முயற் சிகள் செய்தாலும் வெற்றி கிடைக்காது. தூக்கம் சரியாக வராது. எப்போதும் பயத்துடன் வாழ் வார்கள்.
சூரியன் மட்டுமின்றி ஜாதகத்தில் ராகுவும் சனியும் சரியில்லாமலிருந்தால் அவருக்கு நிறைய பகைவர்கள் இருப்பார்கள்.
லக்னத்தில் சூரியன் பலவீனமாக இருந்தால் ஜாதகருக்கு வயிற்றில் பித்தம் இருக்கும்.
ஒற்றைத் தலைவலிலி வரும். வாழ்வின் முற்பகுதியில் பலவித கஷ்டங்களையும் அனுபவிப்பார்.
31 வயதுவரை பல சிக்கல்களைச் சந்திப்பார்.
லக்னத்தில் சனி, சூரியன், ராகு அல்லது சனி, சூரியன், செவ்வாய் இருந்தால், இல்வாழ்க்கை யில் பல இன்னல்கள் ஏற்படும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும்.
சூரியன், சுக்கிரன், சந்திரன் லக்னத்தில் இருந்தால் கண்ணில் நோய் வரும்.
ஒரு ஜாதகத்தில் 2-ஆவது பாவத்தில் சூரியன், செவ்வாய், சனி இருந்தால் அவருக்கு இல்வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. தேவை யற்ற விஷயங்களைப் பேசி உறவுகளைக் கெடுத்துக் கொள்வார்.
ஒருவரின் ஜாதகத்தில் 3-ஆவது பாவத்தில் பாவகிரகத்துடன் சூரியன் இருந்தால் அண்ணன்- தம்பி உறவு சரியாக இருக்காது.
சூரிய பகவான் 4-ஆவது வீட்டில் பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது பாவகிர கத்தின் பார்வை இருந்தால், தந்தையின் சொத்தில் பிரச்சினை இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதகரை ஏமாற்றி விடுவார்கள். அண்ணன்- தம்பி உறவு சீராக இருக்காது.
ஒரு ஜாதகத்தில் 5-ல் சூரியன் இருந்து அதை பாவகிரகம் பார்த்தால் பலருக்கு வாரிசுகள் இருக்காது. சிலருக்கு முதல் குழந்தை வயிற் றிலிலிருக்கும்போது தொல்லைகள் ஏற்படும். 5-ல் இருக்கும் சூரியனை 11-ல் இருந்து சனி, செவ்வாய் அல்லது சனி, ராகு பார்த்தால், அவருடைய வீட்டுவாசல் சரியாக இருக்காது. நீர்த்தொட்டி சரியான இடத்தில் இருக்காது. தென்கிழக்கில் தோஷங்கள் இருக்கும்.
ஜாதகரின் படுக்கையறை வடமேற்கில் இருக்கும்.
அதனால் குழந்தை பிறக்கும்போது பிரச்சினை ஏற்படும்.
6-ல் சூரியன், சனியுடன் இருந்தால் ஜாத கருக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் வரும். சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும். சிலருக்கு உணவு ஜீரணமாகாமல், பித்தம் அதிகமாக இருக்கும்.
7-ல் சூரியன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல மனைவி அமைவாள். ஆனால், அந்த சூரியனை சனி பார்த்தால், மனைவியின் உடல்நலம் பாதிக் கப்படும். தொழில் செய்யுமிடத்தில் நண்பர்கள் சரியாக அமையமாட்டார்கள்; ஏமாற்று வார்கள்.
ஜாதகத்தில் சூரியன் 8-ல் இருந்து, அதை சுபகிரகங்கள் பார்த்தால் அவருக்கு, நல்ல வீடு அமையும். ஆனால் பாவகிரகத்துடன் சூரியன் அல்லது சனி, சூரியன், செவ்வாய் அல்லது சனி, சுக்கிரன், ராகு இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. வீட்டில் தோஷங்கள் இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் 9-ல் இருந்து, அதை சுபகிரகங்கள் பார்த்தால், அவர் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறுவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆனால், பாவகிர கத்துடன் சூரியன் இருந்தால் அல்லது பார்க்கப் பட்டால் அவர் பல சிக்கல் களைச் சந்திப்பார். நண்பர் களும், உறவினர்களும் ஏமாற்று வார்கள்.
சூரியன் 10-ல் இருந்தால் ஜாதகர் புகழுடன், நல்ல அரசுப் பதவியில் இருப்பார்.
சுபகிரகத்துடன் சூரியன் இருந்தால் அல்லது சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால், வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். சூரியன் பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், தொழில் செய்யுமிடத்தில் பல பகைவர்கள் இருப்பார்கள். தொழிலிலில் சிக்கல்கள் உண்டாகும்.
சூரியன் 11-ல் இருந்தால் ஜாதகர் புகழுடன் இருப்பார். அவருக்கு ஒரு வாரிசு இருக்கும்.
12-ல் சூரியன், செவ்வாயுடன் இருந்தால், திருமணத் தடை இருக்கும். தாமதமாகத் திருமணம் நடக்கும். நிரந்தரமாகத் தொழில் அமையாது.
ஒரு வீட்டின் வடகிழக்கு துண்டிக்கப்பட்டு, வீட்டின் கிழக்கு திசையில் குப்பைத்தொட்டி இருந்தால், கிழக்கில் கருப்பு வண்ணம் அதிகமாக இருந்தால் அங்கு சூரிய தோஷம் உருவாகும். கிழக்குப் பகுதி இருட்டாக இருந்து, மத்தியப் பகுதியில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால் அந்த வீட்டில் பித்ரு தோஷம் உண்டாகும். வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும்.
பரிகாரங்கள்
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு செம்பில் நீர் எடுத்து, அதில் குங்குமம், சர்க்கரை கலந்து, அதை சூரிய பகவானுக்கு வார்க்கவேண்டும். காயத்ரி மந்திரத்தைப் படிக்கவேண்டும். கோதுமை தானம் செய்யலாம். மாலையில் பைரவர் ஆலயத்திற்குச் சென்று ஐந்து தீபங்களை ஏற்றி வணங்கவேண்டும். அல்லது ஐந்து முகங்கள் கொண்ட தீபத்தை ஏற்றலாம்.
செல்: 98401 11534